Wednesday, June 1, 2011

தமிழ்க்கவிதை..!

எல்லோருக்கும் வணக்கமுங்கோ..

சில மாதங்கள் இடைவெளி விட்டு திரும்ப சந்திக்கிறோம்...
அதுக்குள்ள சுனாமி, ஊழல்கள், தேர்தல்கள், கைதுகள்ன்னு
பல களேபரங்கள் நடந்து போச்சு.. போகட்டும்..
சமீபத்துல நாம சந்திச்ச இளைஞர்கள்கிட்ட ”கவிதைகள் பிடிக்குமா?”ன்னு கேட்டோம்.
கொதிச்சு கொந்தளிச்சுட்டாங்க.. ஊடகங்கள் தொடங்கி உதவாத நூல்கள்
வரை பாடா படுத்துதாம் .. அடக் கொடுமையே..!
( ஆனால் புரிகின்ற, தரமானக் கவிதைகள் பிடிக்குமாம்.. )

அவங்களோட கொதிப்பைச் சுருக்கி, தொகுத்து தந்திருக்கோம்... படிங்க...

தமிழ்க்கவிதை..!!!

தமிழ்க் கவிதை..
அது தாலாட்டும் உன் மனதை..!
இந்தா பிடி..
இந்த நூல்களைப் படி..
இது முன்னேற்றும் படி..!

என்ற நண்பர்களின் பேச்சை
நம்பி நான் படிச்சேன்..

ஆதிகால‌த்து புளிச்ச‌ மாவோ..,
ஆத்து ம‌ண‌லோ, ம‌ண்ணோ, த‌விடோ..
அச்சில் ஊத்தி வ‌டிவா எடுத்து
கொட்டி வச்சிருந்தாங்க
குப்பையைப் போல‌..
ப‌டிக்க‌வே த‌ய‌க்க‌மா இருந்துச்சு ..
ப‌டிச்ச‌பின் ம‌ய‌க்க‌மா வந்துடுச்சு ..

மத்த புத்தகமாவது நல்லா இருக்காதான்னு
மளமளன்னு படிச்சு தொலைச்சேன்..!

க‌டிக்குது செருப்புன்னு
க‌ழ‌ட்டி எறிஞ்சுபுட்டு
கொதிக்கிற‌ தார்ரோட்டில் ந‌ட‌ந்து
குதிகால் கொப்புளிச்ச‌ க‌தையாகிப் போச்சு..

தட்டச்சு தெரிஞ்ச
தகுதி ஒண்ணை வச்சிக்கிட்டு,
விளங்காம எழுதுற
வித்தையையும் கத்துக்கிட்டு,
பேரழிவு ஆயுதம் போல்
பின்நவீனம், அதிநவீனமுன்னு
பீதியைக் கிளப்பிட்டாய்ங்க…

எத்தனைமுறைப் படிச்சாலும்
தமிழ் வித்தகர்க்கே விளங்காது..
’பொத்’ன்னு விழுந்துடுவாங்க..
பொறிகலங்கிப் போய்டுவாங்க…

புரியலைன்னு உண்மை சொன்னா
புதுமைக்கு எதிரின்னு
புறந்தள்ளிடுவாங்களோன்னு பயம்..
புரியுதுன்னு எதுக்கும்
பொய்யத்தான் சொல்லிடுவோமா?

வேணாம்..
நடக்கிறது நடக்கட்டும்னு
பொறுக்க முடியாம...
"இந்த எழுத்துக்கு அர்த்தம்
இருக்கான்னு" கேட்டதுக்கு,
“தோணுறது எது உனக்கோ
அதையே தோதாக வச்சிக்கோ”ன்னு
காதுல பூ சுத்தி விட்டுட்டு
காணாமப் போய்ட்டாய்ங்க….

வலைப்பூ பக்கமாவது
இளைப்பாறலாம்னு போனா - அங்கே
அலப்பறையைக் கிளப்புறாய்ங்க..!
அலறி அடிச்சி ஓடுறோம் ..!!

கவிதைன்னு சொல்லி
இப்படிக் கலவரப் படுத்தினா,
திரும்புற பக்கமெல்லாம்
திகிலைக் கிளப்பினா,
திரும்பி பார்க்காம
மிரண்டுதானே ஓடுவோம்..?

பலாப்பழத்தை உடைச்சு
சுளையில் விதை நீக்கி,
முடிஞ்சா…
பழச்சாறாக்கிக் கொடுத்தா..

எங்களுக்கு மட்டுமில்லை...
எல்லோருக்கும்
மொழி இனிக்கும்..
கவித்தமிழ் செழிக்கும்…!!!
இத்தோட முடிக்கிறேன்
நன்றி வணக்கம்..!!!

9 comments:

  1. நீங்க என்ன தமிழ்க் கவிதை தாத்தாவா பாட்டியா?
    நல்லாருக்கு ஆனால் யார் காதிலயோ பூ சுத்தற மாதிரியிருக்கு

    தமிழ்க் கவிஞர்களே இனியாவது கலவரப்படுத்தாம கவிதை எழுதுங்கப்பா...

    வாழ்த்துக்கள். நல்ல பதிவு இக்காலத்திற்கு ஏற்ற பதிவு.

    ReplyDelete
  2. அந்த முயற்ச்சியில்தான் இருக்கிறோம்..
    கண்டிப்பாக என்றாவது குறிஞ்சிப்போல் கவிதைகள் கிடைக்கும் அதுவரை அதற்கான போராட்டங்களின் அனுமுறைகள் மட்டுமே...

    ReplyDelete
  3. ungaludaya pathive nalla kavithai thaan. niraya ezhuthunga. intha pathivai varaverkirom.

    ReplyDelete
  4. ///// அவங்களோட கொதிப்பைச் சுருக்கி, தொகுத்து தந்திருக்கோம்..////////

    சுருக்கினதே இவ்ளோ பெருசா? ஜாலியான கவிதை சூன்யா.... தொடருங்கள்... !

    ReplyDelete
  5. சொல்லின் செல்வர்June 29, 2011 at 5:07 AM

    அன்பிற்கினிய தமிழ்ச் சுவைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்!

    கவிஞர் மணிசரவணன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு அன்று மாலை
    ஆனந்தபவன் வரவேற்பு அரங்கத்தில் 5.00 மணிக்குத் தொடங்கி நடைபெறவிருக்கிறது...
    நிகழ்ச்சியில் அறிஞர் பலர் வாழ்த்தவும் சிறப்புரையாற்றவும் இருக்கிறார்கள்....
    அனைவரும் வந்து இளம் கவிஞரை பாரட்டுங்கள் என சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் அன்போடு அழைக்கின்றது...

    தமிழ்சுவைப் பருக தவறாது வருக!

    இத்துடன் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது ....

    நன்றி!..
    சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்.

    என்றும் அன்புடன் உங்கள்
    தியாக.இரமேஷ்.

    ReplyDelete
  6. சொல்வேந்தர்June 29, 2011 at 5:08 AM

  7. சொற்சித்தர்June 29, 2011 at 5:09 AM

  8. சொற்களஞ்சியம்June 29, 2011 at 5:10 AM

  9. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்June 29, 2011 at 5:10 AM

    கவிஞர் மணிசரவணன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு அன்று மாலை
    ஆனந்தபவன் வரவேற்பு அரங்கத்தில் 5.00 மணிக்குத் தொடங்கி நடைபெறவிருக்கிறது...
    நிகழ்ச்சியில் அறிஞர் பலர் வாழ்த்தவும் சிறப்புரையாற்றவும் இருக்கிறார்கள்....
    அனைவரும் வந்து இளம் கவிஞரை பாரட்டுங்கள் என சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் அன்போடு அழைக்கின்றது...

    தமிழ்சுவைப் பருக தவறாது வருக!

    இத்துடன் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது ....

    நன்றி!..
    சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்
    தலைவர்
    ரெத்தினவேங்கடேசன்

    ReplyDelete